×

ஆந்திரா: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு  

 

ஆந்திராவில் உள்ள தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் அத்யுதாபுரத்தில்  உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 17 பேர் உயிரிழந்தனர்.  தீவிபத்துக்கு பிறகு ஆலையின் சுவரும் இடிந்துவிழுந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  மற்றும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.  


சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.  இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, படுகாயமடைந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சமும், சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு துணையாக நிற்போம்.  விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.