ஏர் இந்தியா நிறுவனத்தின் நேர்காணலுக்கு 25,000 பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல்
Updated: Jul 17, 2024, 11:54 IST
மும்பையில் ஏர் இந்தியா நிறுவனம் நடந்திய நேர்காணலுக்கு 25,000 பேர் குவிந்ததை அடுத்து கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.
மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 600 பணியிடங்களுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்கு திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விமானத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலைக்காக ரூ, 22,000 சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் திரண்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பெட்டியில் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.