×

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 8 பேர் பலி

 

சித்தூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரில் உள்ள சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மொகிலி மலைப்பாதையில் ஆந்திர மாநில ஆர்டிசி பேருந்து கண்டெய்னர் லாரி  மீது மோதியது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயமடைந்தனர். சித்தூரில் இருந்து பெங்களூருக்கு ஆந்திர மாநில அரசு பேருந்து சென்று கொண்டுருந்தது. அதற்கு பின்னாள் விஜயவாடாவில்  இருந்து பெங்களூர் நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் பலமநேர் அருகே மொகிலி மலைப்பாதையில் பேருந்து எதிர்திசையில் லாரி ஒன்று சாலையை கடக்க முயன்று அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது மோதியதில் லாரியில் இருந்த கம்பிகள் பேருந்து மீது விழுந்ததில் 8 பேர் இறந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட கலெக்டர் சுமித் குமார், எஸ் பி மணிகண்டா  அங்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலமநேர், பங்காரு பாளையம், சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் சித்தூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் கிரேன் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்காத வகையில் விபத்தை நடந்த பகுதியில் இருந்து லாரி, பேருந்துகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.