×

2000 ரூபாய் நோட்டுகளில் 93% திரும்ப பெறப்பட்டுள்ளன- ரிசர்வ் வங்கி

 

நாட்டில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள 2000 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதேபோல் தங்களது வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நாட்டில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 வரை ரூ.23.32 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் 87% வைப்புத் தொகையாகவும், 13% பிற மதிப்பு நோட்டுகளாவும் மாற்றப்பட்டுள்ளன.