×

வாக்கு சேகரிக்க பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர்- ஓட ஓட விரட்டிய தேனீக்களால் பரபரப்பு

 

தெலங்கானாவில் வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட வேட்பாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினரை விரட்டி விரட்டி தாக்கிய தேனீக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானாவில் தேர்தல் வேட்புமனு தாக்கல் நடந்து வரும் நிலையில், கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.  குறிப்பாக பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, பிஎஸ்பி கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக யாதாத்திரி புவனகிரி மாவட்டம் ஆலேருவில் பிஆர்எஸ் எம்எல்ஏ வேட்பாளரும், எம்எல்ஏவுமான கொங்கிடி சுனிதா பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது கட்சி தொண்டர்கள் பட்டாசு வைத்தபோது மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்தில் பட்டாசு பறந்து சென்று விழுந்தது. 

இதனால் தேனீக்கள் பறந்து சென்று அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது. பிரசார ரதத்தில் இருந்த எம்.எல்.ஏ.  சுனிதா உஷாராகி கீழே இறங்கி காரில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்த மற்ற கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியையும் பெண்கள் புடைவை கொண்டு முகத்தை மூடி கொண்டு ஓட்டம் பிடித்து தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பினர்.  சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பிரச்சாரம் தொடர்ந்தது.  தேனீக்கள் தாக்கியதில் இருவருக்கு  காயம் ஏற்பட்டதால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.