அரசுப் பேருந்தின் ஜன்னலில் சிக்கிய பயணியின் தலை
Jan 24, 2024, 17:20 IST
அரசு பஸ்சின் ஜன்னல் ஓர கண்ணாடியில் சிக்கி கொண்ட பயணியின் தலையை சுமார் அரை மணி நேரப்போராட்டத்துக்கு பின்னர் சக பயணிகள் போராடி மீட்டனர்.
பேருந்து பயணத்தின் போது ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகள், குழந்தைகள், யாரும் ஜன்னலுக்கு வெளியே தலை, கையை வெளியே நீட்ட வேண்டாம் என எச்சரிப்பது வழக்கம். ஆனால், சிலர் அந்த எச்சரிக்கையை புறக்கணித்து அவ்வாது வைத்து வருவார்கள். அதேபோல் நேற்று ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நௌபாடாவில் இருந்து தெக்கலி நோக்கி ஆர்டிசி பேருந்து சென்றது. இந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர் பேருந்தில் ஏறியவுடன் பிக்சிட் ஜன்னல் கண்ணாடி ஓரம் அமர்ந்து ஜன்னலில் தலையை வைத்து வெளியே பார்த்தார். அவ்வளவுதான் அவர் தலையை மீண்டும் வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.