×

“எனக்கு வியாபாரமே நடக்கல... எல்லோரும் அந்த கடைக்கு போறாங்க..” எதிர் கடையை தீவைத்து கொளுத்திய வியாபாரி

 

தனக்கு வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்ற கோபத்தில் எதிர்கடையில் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம்  கரீம்நகர் மாவட்டம் சொப்பதண்டியில்  கோடூரி ஸ்ரீனிவாஸ் -  கலிபெல்லி கனகய்யா ஆகியோர் எதிரெதிரே துணி கடை வைத்து  வியாபாரம் செய்து வருகின்றனர்.   கடந்த சில நாட்களாக கோடூரி ஸ்ரீனிவாஸ் தனது கடையில் வியாபாரம்  சரியாக நடக்காததால் கடன் ஏற்பட்டது.  அதேநேரத்தில்  எதிரே உள்ள கலிபெல்லி கனகய்யா கடையில் நல்ல வியாபாரம் நடந்து வந்ததால் அவர் மீது வெறுப்பு கொண்டு நள்ளிரவில் கேனில் பெட்ரோல் கொண்டு சென்று கனகய்யா கடையின் ஷட்டர் கீழ் ஊற்றி தீ வைத்தார். இதில் கனகய்யா கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலில்படி சம்பவம் குறித்து போலீசார்,  தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.கேமிரா காட்சிகளை  பார்த்ததில்  பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது ஸ்ரீனிவாஸ் என்பது தெரிந்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது தனது கடைக்கு யாரும் வராமால் கனகய்யா கடைக்கு செல்வதால் தீ வைத்ததாக கூறினார். இதனையடுத்து ஸ்ரீனிவாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். கனகய்யா தீ கடையில் உள்ள பொருட்கள் அனைத்து தீயில் எரிந்ததால் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.