நாளை பிரதமர் மோடி தலைமையில் வெற்றிப்பேரணிக்கு ஏற்பாடு
பிரதமர் மோடியின் வெற்றி பேரணி டெல்லியில் நாளை பிரதமர் வீட்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகம் வரை மோடி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிச்சயம் நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என இந்தியா கூட்டணி உறுதியுடன் கூறி வருகிறது. ஆனால் கருத்துக்கணிப்புகள் பாஜகவே வெற்றி பெறும், மோடியே மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பார் எனக் கூறிவருகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியின் வெற்றிப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டில் இருந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகம் வரை மோடி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் இல்லம் அமைந்துள்ள டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் இருந்து, பாஜக தலைமை அலுவலகம் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள ஏராளமான பாஜக தொண்டர்கள் டெல்லியில் திரள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.