நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஐபிஎல் போட்டிகளை Fairplay செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Fairplay செயலியில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்புதை ஊக்குவித்ததாக நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர்பான சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக நடிகை தமன்னா பாட்டியா இன்று மதிய குவஹாத்தியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் (ED) முன் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தினர். இருப்பினும் விசாரணை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலி. மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர். இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது குறிப்பிடதக்கது.