×

லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இருந்து அதானி விடுவிப்பு

 

லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இருந்து அமெரிக்க நீதித்துறையால் அதானி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒப்பந்தம் பெறுவதற்கு அதானி நிறுவனம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கிய போது, ​​விசாரணையை நிறுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. தற்போது அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில் லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இருந்து அமெரிக்க நீதித்துறையால் அதானி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியத்துக்கு அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடு திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடதக்கது.