×

அதானி பவர் நிறுவனத்திற்காக விதிமுறைகளைத் திருத்திய பாஜக அரசு

 

அதானி பவர் நிறுவனத்திற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு விதிமுறைகளைத் திருத்தியுள்ளது.

மின்சாரத்தை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு மட்டுமே அனுப்பும் மின் உற்பத்தியாளர்கள் அதனை தற்போது இந்தியாவில் மீண்டும் விற்பனை செய்யலாம் என தனது விதிமுறைகளில் திருத்தங்களைச் செய்துள்ளது மத்திய அரசு. 

அதாவது ஜார்கண்ட் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் 1,600 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம், தனது மொத்த மின் உற்பத்தியையும் பங்களாதேஷுக்கு விற்பனை செய்து வந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை ஜார்கண்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டு மீண்டும் பங்களாதேஷுக்கு அதானி குழுமம் விற்பனை செய்கிறது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கலவர சூழல் காரணமாக, அந்த மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அதானி பவர் நிறுவனத்துக்கு அனுமதியளித்துள்ளது. 

இந்த நிலையில், தனக்கு பிடித்தமானவர்களுக்கு சலுகை வழங்க வேண்டுமென்றால் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்படுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.