×

கேரளாவுக்கு அதானி ரூ.5 கோடி நிதியுதவி

 

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கேரள முதலமைச்சரின்  நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கினார் தொழிலதிபர் கவுதம் அதானி.

வரலாறு காணாத கன மழையால்  மலைச்சரிவை  புரட்டிய வெள்ளம், வயநாட்டை சின்னாபின்னமாக்கியது. வீடுகள் இருந்த அடையாளமே இல்லாத அளவில், ஒரு செங்கல் கூட இல்லாமல் வீடுகளை பெருவெள்ளம் அடியோடு அடித்து சென்றது. கார்கள் பயணித்த, கிராமத்து தார் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு கிடக்கின்றன. மனிதர்கள் வாழ்ந்த வடு கூட இல்லாமல் வலியையும், வேதனையும் தந்திருக்கிறது நெஞ்சை பிழியும் இந்த பேரிடர் நிகழ்வு. வீடுகளில் அருகில் தூங்கியவர்கள் கதி என்ன ஆனது என்றே தெரியாமல் பலரும், உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.


தொழிலதிபர் கவுதம் அதானி கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவுதம் அதானி, “வயநாட்டில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகளுக்கு வருந்துகிறேன். இக்கட்டான சூழலில் அதானி குழுமம் கேரளாவுக்கு துணை நிற்கிறது. வயநாடு நிலச்சரிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடையுடன் எங்களது ஆதரவையும் வழங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.