×

தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும்! ஜனாதிபதிக்கு நீதிபதிகள் கடிதம்

 

தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டுமென குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆகியோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன, பல புகார்கள் வந்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவேளை தொங்கு நாடாளுமன்ற அவை அமையும் பட்சத்தில் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமென என குடியரசுத்தலைவர் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிச்சயம் நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என இந்தியா கூட்டணி உறுதியுடன் கூறி வருகிறது.