×

“துணை முதலமைச்சரை பார்க்க வேண்டும்”- சாலையில் நிர்வாணமாக அமர்ந்து பெண் அகோரி தர்ணா

 

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை சந்திக்க வேண்டும் என சாலையில் அமர்ந்து நிர்வாணத்துடன் பெண் அகோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் அகோரி நிர்வாணத்துடன் உடல் முழுவதும் விபூதி பூசிப்கொண்டு கையில் திரிசூலத்துடன் பல கோயில்களுக்கு சென்று வருகிறார். செல்லும் இடங்களில் சனாதனம் காப்பாற்ற  வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் நிறுத்த வேண்டும் என கூறி வருகிறார். இதே கருத்தோடு செயல்பட்டு வரும் ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கூறி வருகிறார். 

இந்நிலையில் பவன் கல்யாணை சந்தித்து பேச வேண்டும் என பெண் அகோரி இன்று விஜயவாடா -  ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் மங்களகிரி அருகே ஜனசனா கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் சாலையிலேயே மங்களகிரியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெண் அகோரி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்து வருகிறார். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் பெண் அகோரியை போலீஸ் ஜீப்பில்  அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் பெண் அகோரி போலீசாரை தாக்கி சாலையில் அமர்ந்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது