×

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டணமும் உயர்ந்தது!!
 

 


ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து,  ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது.  ஜூலை 3ம் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஏர்டெல் 10% முதல் 20% வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. 

 ரூபாய் 179 ஆக இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூபாய் 199 ஆக அதிகரித்துள்ளது.  தினசரி 2 ஜிபி டேட்டா உடன் கூடிய வருடாந்திர ரீசார்ஜ் ரூபாய் 600 க்கு உயர்த்தப்பட்டு,  ரூபாய் 3599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பேக்குகளின் விலையும் அதிகரித்துள்ளது. Airtel தனது மொபைல் கட்டணங்களை 2024 ஜூலை 3ம் தேதி முதல் மாற்றி அமைக்க உள்ளது.

 பட்ஜெட் சவாலான நுகர்வோர் மீதான எந்த சுமையையும் நீக்கும் வகையில் நுழைவு நிலை திட்டங்களில் மிகப் குறைந்த விலை உயர்வு இருப்பதை உறுதி செய்துள்ளோம் என்று ஏர்டெல் ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.