×

உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமித்ஷா

 

சனாதானம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “I.N.D.I.A கூட்டணி கட்சிகள் இந்த நாட்டின் கலாச்சாரத்தையும், இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் அவமதித்து வருகிறார்கள். I.N.D.I.A கூட்டணியின் 2 பிரதான கட்சிகளான காங்கிரஸும், திமுகவும்  சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தங்களது திருப்திக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும்,  I.N.D.I.A கூட்டணி கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். காந்தி குடும்பத்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்ற அகங்காரமும், கர்வமும் காங்கிரஸுக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்துமதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா? என்பதை அக்கட்சி தெளிவுப்படுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன தர்மத்தை அவமதித்தது இது முதல் முறையல்ல, கடந்த 2 நாட்களாக வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது. மக்களின் இதயங்களில் சனாதன ஆட்சி உள்ளது. அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும். ராமர் கோயில் திறப்பை இந்தியா கூட்டணியால் தடுக்க முடியாது”  என்றார்.