×

ஆந்திரா , தெலாங்கானா வெள்ளம்: நடிகர் பிரபாஸ் ரூ. 5 கோடி நிதியுதவி.. 

 


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில மக்களுக்கு  ரூ. 5 கோடி வழங்கி  நடிகர் பிரபாஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.  

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் இரு மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர், எல்லூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில்  15 பேர். தெலங்கானாவில் 18க்கும் மேற்பட்டோர் என மழை வெள்ள பாதிப்பால் 32க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

இரு மாநிலங்களிலும்  4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  சுமார்  2. 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். 

அந்தவகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு  நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இரு மாநிலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சம் என ரூ. 1கோடி நிதியுதவி அளித்துள்ளார்.  இதேபோல்,  நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு,   அல்லு அர்ஜுன், பவன் கல்யான், பாலகிருஷ்ணா ஆகியோரும் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அதிகபட்சமாக இரு மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 50 கோடியை அம்மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.