×

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

அமலாக்கத்துறை கைது மற்றும் காவலில் எடுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தொடர்ந்தார்; ED வழக்கில் தரப்பட்ட ஜாமீனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  கெஜ்ரிவால் 90 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.