×

அயோத்தி ராமர் கோவில் தொடக்க விழா மேடையில் மோடியுடன் மோகன் பகவத்!

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மேடையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக்
 

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மேடையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


தற்போது விழா மேடையில் யார் யார் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் இது குறித்து கூறுகையில், மேடையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் இருப்பர். இவர்கள் விழாவில் பேசவும் செய்வார்கள்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரும் பங்கேற்க வாய்ப்புள்ளது. அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும். முன்னதாக 11.15க்கு மோடி விழா நடைபெறும் இடத்துக்கு வருவார். அவர் அங்குள்ள அனுமார் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு விழா மேடைக்கு வருவார். மூன்று மணி நேரம் அவர் அயோத்தியில் இருப்பார். அதன் பிறகு 2 மணி அளவில் டெல்லி திரும்புவார்.


ராமஜென்ம பூமி வளாகத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். இதன் மூலம் விழா நடைபெறும் இடத்தில் கொரோனா பரவல் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.