×

1000 ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில்… சென்னை ஐஐடி உதவியை நாடிய அறக்கட்டளை!

1000ம் ஆண்டுகளுக்கு மேலும் உறுதியாக இருக்கும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கற்களால் கட்டப்படுகிறது என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராஜ் கூறுகையில், “ராமர் கோவில் கட்டும் பணியில் கட்டுமானத் துறை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் சென்னை ஐஐடி மற்றும் சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் உதவியைப் பெற்றுள்ளோம். கட்டுமானத்துக்கு எல் அண்ட் டி நிறுவனமும், மண்ணின் ஆய்வு எப்படிப்பட்ட கட்டுமானத்தை
 

1000ம் ஆண்டுகளுக்கு மேலும் உறுதியாக இருக்கும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கற்களால் கட்டப்படுகிறது என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராஜ் கூறுகையில், “ராமர் கோவில் கட்டும் பணியில் கட்டுமானத் துறை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் சென்னை ஐஐடி மற்றும் சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

உதவியைப் பெற்றுள்ளோம். கட்டுமானத்துக்கு எல் அண்ட் டி நிறுவனமும், மண்ணின் ஆய்வு எப்படிப்பட்ட கட்டுமானத்தை எழுப்பலாம் என்று ஆய்வு செய்ய சென்னை ஐஐடியும், நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து கோவிலை பாதுகாக்கும் வகையில் கட்டுவது எப்படி என்று சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டும் துணை செய்கின்றன.


இந்த கோவில் கட்ட 10 ஆயிரம் தாமிர கம்பிகள் தேவைப்படுகின்றன. மக்கள் இந்த கோவில் கட்டுமானப் பணியில் தங்கள் பங்களிப்பும் இருக்க விரும்பினால் தாமிர கம்பிகளை வழங்கலாம்.


கோவில் கட்டுமானப் பணியில் செங்கல் பயன்படுத்தாமல் கருங்கல்லைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் கட்டுமானம் வெயில், மழை, காற்று உள்ளிட்ட எதனாலும் பாதிக்கப்படாமல் குறைந்தது 1000ம் ஆண்டுகளாவது உறுதியாக இருக்கும்” என்றார்.