×

நேருவின் வாரிசுகளும், காங்கிரஸார்களும் தாங்கள் இந்துக்கள் என்று பெருமையாக சொல்லுகிறார்கள்.. காங்கிரஸின் அஜிஸ் குரேஷி

 

நேருவின் வாரிசுகளும், காங்கிரஸார்களும் மத ஊர்வலம் நடத்தி ஜெய் கங்கா மையா என்று சொல்லி, தாங்கள் இந்துக்கள் என்று பெருமையாக சொல்லுகிறார்கள் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் அஜிஸ் குரேஷி பேசியிருப்பது அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அஜித் குரேஷி. இவர், காங்கிரஸ் உள்பட நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம் சமூகம் தங்களின் அடிமைகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.  அஜிஸ் குரேஷி உரையின் வீடியோவை பா.ஜக.வின் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி எக்ஸில் ஷேர் செய்து இருந்தார். அந்த வீடியோவில், அஜித் குரேஷி,  எனக்கு எந்த பயமும் இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்குங்கள். 

இன்று நேருவின் வாரிசுகளும், காங்கிரஸார்களும் மத ஊர்வலம் நடத்தி ஜெய் கங்கா மையா என்று சொல்லி, தாங்கள் இந்துக்கள் என்று பெருமையாக சொல்லுகிறார்கள். காங்கிரஸ் அலுவலகத்தில் சிலைகளை நிறுவுகிறார்கள், அது நீரில் மூழ்குவது பற்றியது. காங்கிரஸ் உள்பட நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம் சமூகம் தங்களின் அடிமைகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

முஸ்லிம்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்கள் வேலை கொடுக்கவில்லை. நீங்கள் அவர்களை போலீஸ், ராணுவம் அல்லது கடற்படையில் எடுக்கவில்லை. பிறகு ஏன் முஸ்லிம்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? என்று பேசியுள்ளார். அஜிஸ் குரேஷி முன்பு உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் கவர்னராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஜனவரி 24ம் தேதியன்று மத்திய பிரதேச உருது அகாடமியின் தலைவராக அம்மாநில அரசால் நியமிக்கப்பட்டார்.