வேட்டிக்கு தடை- பெங்களூரு வணிக வளாகத்தை மூட உத்தரவு
Jul 18, 2024, 17:40 IST
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிவந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை மூடும்படி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான மால்களில் ஒன்றான ஜிடி மாலுக்கு நேற்று மாலை விவசாயி ஒருவர் வேஷ்டி அணிந்தவாறு தனது மகனை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். கையில் படம் பார்க்க டிக்கெட் இருந்த நிலையில் அவர் உள்ளே நுழைந்தபோது மாலின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். படம் பார்க்க டிக்கெட் இருந்த போதிலும் விவசாயி வேஷ்டி அணிந்திருந்த காரணத்தினால் அவரை உள்ளே விட முடியாது என்று காவலாளி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவசாயி காவலாளியிடம் படம் பார்க்க செல்ல அனுமதி கோரி உள்ளார்.