×

மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - பாஜக கூட்டணி முன்னிலை!

 

மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது....

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய அணி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. 

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 82 தொகுதிகளிலும், சிவசேனா ஷிண்டே அணி 30 இடங்களிலும், என்.சி.பி.அஜித் பவார் அணி 16 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல் காங்கிரஸ் 21 இடங்களிலும், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி 25 இடங்களிலும், என்.சி.பி. சரத்பவார் அணி 36 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.