திருப்பதியில் பல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- பின்னணியில் மு.க.ஸ்டாலின்
திருப்பதியில் பல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மீக நகரான திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வருவதோடு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு தினந்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லக்கூடிய திருப்பதி நகரில் 5 நட்சத்திர ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள் வரை உள்ளது. இந்நிலையில் நேற்று பல ஓட்டல்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. லீலாமஹால் அருகே உள்ள மூன்று தனியார் ஹோட்டல்களுக்கும், ராமானுஜ சந்திப்பு அருகே உள்ள மற்றொரு ஓட்டலுக்கும் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். தீவிரவாதி ஜாபர் சாதிக்கிற்கு தமிழகத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறித்து மின்னஞ்சலில் கண்டனம் தெரிவித்தோடு, தண்டனை கிடைக்க தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் ஒத்துழைப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என மெயிலில் குறிப்பிடப்பட்டு ஆன்மீக நகரில் ஓட்டல்களில் குண்டு வைத்து தகர்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காத நிலையில் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.