×


இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

 

குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.

 பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.