×

எருமை மாட்டை பலாத்காரம் செய்த போதை ஆசாமி

 

ஆந்திராவில் எருமை மாட்டை கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரவாசரம் மண்டலம் தோகலபுடி கிராமத்தில்  விவசாயி சீதாராமையாவிற்கு சொந்தமான நிலத்தில் எருமை மாட்டை வைத்து பால் விற்று வருகிறார். இந்நிலையில் மாட்டு கொட்டகையில் இருந்த எருமை மாடுகளை இரவு நேரத்தில் வந்த சிலர் கால்களை கட்டிவிட்டு  வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மறுநாள் பால்  பாலியல் வன்கொடுமையின் போது எருமை மீது  காயங்களை ஏற்படுத்தி இருப்பதாக சீராமைய்யா போலீசாருக்கும் ஊடகத்தினருக்கும் தெரிவித்தார். 

ஆந்திராவில் மைனர் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், எருமை மாடு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இந்தக் கொடுமையைச் செய்ததாக எருமை மாட்டின் உரிமையாளர் விவசாய பில்லி சீதாராமையா கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.