×

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 இந்தியர்களின் நிலை என்ன?

 

நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து மர்ஸியாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் உயிரிழந்தனர்.  

நேபாள நாட்டின் பொக்காராவிலிருந்து காத்மண்டுவுக்கு 40 இந்தியர்களுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். 

விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  மாவட்ட நிர்வாகம்   நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்புப் பணியை முடுக்கிவிட்டது. இதில் ஆற்றில் விழுந்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 14 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா என்பது உள்ளிட்ட முழு விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.