×

விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

 

பதஞ்சலி நிறுவனத்தின் உரிமங்கள் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், எந்தவொரு விளம்பரங்களையும் ஒளிபரப்புவதற்கு முன்னர், ஒளிபரப்பாளர்கள் சுய அறிவிப்பு படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த உச்ச நீதிமன்றம், பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், நடிக்கும் விளம்பரங்களில் இடம்பெறும் தயாரிப்பு தரமற்றதாகவோ, ஏமாற்றுவதாகவோ கண்டறியப்பட்டால் அதில் நடித்தவர்களும் அக்குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. பொருள் அல்லது சேவைகள் குறித்து உண்மைக்கு மாறாக வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு, அதில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தள Infulencer களும் பொறுப்பாவார்கள், மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் உரிமங்கள் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.