×

குறு சிறு நடுத்தர தொழில் கடன்...தகுதி மதிப்பீட்டை அரசு வங்கிகளே செய்து கொள்ளும் - மத்திய அமைச்சர்

 

குறு சிறு நடுத்தர தொழில் கடன்களுக்கான தகுதி மதிப்பீட்டை அரசு வங்கிகளே செய்து கொள்ளும் என நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

கடன் தகுதிக்கான முடிவுகளை எடுப்பதற்கான உள் மதிப்பீட்டு முறைமையை வெளி நிறுவனங்களின் உதவி இன்றி தாமாகவே அரசு வங்கிகள் செய்து கொள்வதற்கான தொழில் நுட்ப கட்டமைப்பு பணிகள் துவங்கியிருப்பதாக குறு சிறு நடுத்தர தொழில்கள் ஒன்றிய இணை அமைச்சர்  தெரிவித்துள்ளார். 2024 பட்ஜெட்டில் ஒரு சிறு நடுத்தர தொழில் கடன்களை எளிமையாக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட போது இப்படியொரு கட்டமைப்பை அரசு வங்கிகள் ஏற்படுத்திக் கொள்ளும் என்று நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியை (எண் 539/28.11.2024) சு வெங்கடேசன் எம்பி எழுப்பி இருந்தார்.