×

ஊழலை ஒழிக்க ரூ.200, ரூ.500 நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும்- சந்திரபாபு நாயுடு

 

ஊழலை ஒழிக்க ரூ.200, ரூ.500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை ஊக்குவிக்க வேண்டும் மாநில வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம், முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.  227வது  கூட்டத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான ரூ.5,40,000 கோடி கடன் திட்டத்தை வெளியிடப்பட்டது.  இதில் முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.3,75,000 கோடியும், பிற துறைகளுக்கு ரூ.1,65,000 கோடியும் ஒதுக்கி கடன் திட்டம் வெளியிடப்பட்டது. 

பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த ஐந்தாண்டுகளில் அரசியல் போர்வையில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் அரசு நிர்வாக சிஸ்டத்தை வாங்க பார்க்கின்றனர்.  அவர்களின் ஊழலை தடுக்க ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை   ஊக்கப்படுத்த வேண்டும் என்று சந்திரபாபு கேட்டுக் கொண்டார்.  சந்திரபாபுவின் கருத்து மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.