×

சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க கோரிய மனு நிராகரிப்பு!

 

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்க கோரிய மனுவை விஜயவாடா நீதிமன்றம் நீராகரித்தது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை சிறைக்கு பதிலாக வீட்டுக் காவலில் வைக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்க கோரியை மனுவை விஜயவாடா நீதிமன்றம் நீராகரித்தது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.