×

இன்று நிலவில் கால் பதிக்கிறது சந்திரயான்-3

 

நிலவின் தென் துருவத்தில் இன்று மாலை 6:04 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை  கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவியது .   விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்  என்றும் பூமியிலிருந்து 3.84  லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  நிலவில் தரையிரங்கிய பின்னர்  நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3  விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர்  நிலவில் சந்திராயன்-3 லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. 

இந்நிலையில் இன்று நிலவில் கால் பதிக்கிறது சந்திரயான்-3. நிலவின் தென் துருவத்தில் இன்று மாலை 6:04 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குகிறது. லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.