×

10 மாவோயிஸ்ட்களை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை! நடனமாடி கொண்டாட்டம்

 

சத்தீஸ்கரில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே  நடந்த துப்பாக்கி சூட்டில் 10 மாவோயிஸ்ட்கள் மரணமடைந்தனர்.

ஒடிசா வழியாக சத்தீஸ்கருக்குள் நக்சலைட்டுகள் நுழைந்ததாக கிடைத்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படை போலீசார்  சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எதிர் திசையில் வந்த  மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதனால் மாவோயிஸ்ட்கும்  போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்ட்கள்  உயிரிழந்தனர்  இறந்தவர்களிடமிருந்து ஏராளமான தானியங்கி தூப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கொ  உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சவான் தெரிவித்தார். 

தொடர்ந்து  என்கவுன்ட்டர்  தொடருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே  இதுவரை 10 மாவோயிஸ்டுகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நக்சலிசம் குறித்து பேசுகையில் ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா, ஒடிசா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா  மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், சத்தீஸ்கரின் மூன்று மற்றும் நான்கு மாவட்டங்களில் இந்தப் பிரச்னை தொடர்கிறது.  அதை ஒடுக்க கடுமையாக செயல்பட்டு வருவதாக   அமித்ஷா கூறி இருந்தார். இதற்கிடையே தெலங்கானாவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக இரண்டு மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியினத்தவர்களை கோடாரியால் வெட்டி  கொன்ற நிலையில் சத்தீஸ்கரில் போலீசார் எண்கவுண்டரில் 10 மாவோயிஸ்ட்கள் கொள்ளப்பட்டனர்.


மாவோயிஸ்டரகளை கொன்ற போலீசார்  துப்பாக்கிகளை கையில் உயர்த்தி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.