×

டானா புயல்- கொல்கத்தா விமான நிலையம் நாளை மூடல்

 

கொல்கத்தா விமான நிலையத்தில் நாளை மாலை 6 மணி முதல் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்ட டானா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தின் சாகர் தீவுகளிலிருந்து 570 கி.மீ. தூரத்திலும், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 490 கி.மீ. தொலைவிலும், தாமாராவுக்கு 520 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலையில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஒடிசா, மேற்குவங்க கடற்கரையில் பூரி சாகர் தீவுக்கு இடையே தீவிர புயலாக நாளை மறுநாள் காலை கரையை கடக்க உள்ளது. 

இந்நிலையில் டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தா விமான நிலையத்தில் நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை  விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு கொல்கத்தா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.