×

அவதூறு வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் இன்று ஆஜர்

 

கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., அரசின் மீது '40 சதவீத கமிஷன்' அரசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அத்துடன் தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி , சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் பா.ஜ., வை 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம் சாட்டினர். அத்துடன்  2023, மே 5ல், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தனர். இதுதொடர்பாக பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கர்நாடக பா.ஜ., முதன்மை செயலர் கேசவ பிரசாத், 2023 மே 8ல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து ராகுல் காந்தி இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

2019-23 ஆட்சியின்போது பாஜக பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாக நாளிதழ்களில் காங்கிரஸ் விளம்பரம் மூலம் அவதூறு பரப்பியதாக ராகுல் காந்தி மீது பாஜக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.