×

காற்றுமாசு- டெல்லியில் நாளை முதல் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை

 

டெல்லியில் காற்று மாசு காரணமாக நாளை முதல் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


தலைநகர் டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் இருந்து வருகிறது.  கொரோனா கால கட்டத்தில் கட்டுபாட்டில் இருந்த காற்று மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி அரசு முறையாக கட்டுப்பாடுகளை விதித்து காற்றுமாசை குறைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  

அதன் ஒரு பகுதியாக  கடந்த 5 ஆண்டுகளாகவே  டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது  பட்டாசு வெடிக்க தடை நீடித்து வருகிறது.பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதும்  பரவியிருக்கிறது. இதனால் காற்று மாசு அதிகரித்து , காற்றின் தரம் மிகவும்  மோசமடைந்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று மதியம் 1 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 425 பதிவு செய்யப்பட்டது

இந்நிலையில் டெல்லி காற்று மாசு காரணமாக, நாளை முதல் வரும் 18 ஆம் தேடி முதல் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க டெல்லி பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை, காற்று மாசு காரணமாக முன்கூட்டியே அளிக்கப்படுகிறது.