×

மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவு- திருப்பதிக்கு பாத யாத்திரை வரவேண்டாம்

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கூறி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர்.  பக்தர்கள் இலவச தரிசனம் , சிறப்பு தரிசனம் என திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் நிலையில் அலிபிரி ,  ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைப்பாதைகள் வழியாகவும்,  பக்தர்கள் ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம்.
 
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கூறி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு நோய்கள் உள்ள பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள். மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால் உடல் பருமனாக உள்ள மற்றும் இதய நோய் கொண்ட பக்தர்கள் மலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.