இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை!
Feb 6, 2024, 08:07 IST
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் ஆகியவை தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடைபெறுகிறது.