×

48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் தேர்தல்!!

 

48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

18 ஆவது மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க வசதியாக  இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். இதற்கு  காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  8 முறை எம்.பி.யாக இருந்த காங்கிரசின் கொடிக்குன்னிலை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.  இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  பாஜகவின் உறுப்பினரை சபாநாயகராக நியமிக்க ஆதரவு கோரினார். ஆனால் பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், மரபுப்படி மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பாஜக சார்பில் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில்  48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், 'இந்தியா' கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் களத்தில் உள்ளனர்.

சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்க உள்ளது.