×

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன

 

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலில் இருந்தது.

தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகம் 83 நாட்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது. அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. 


இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன