×

3ஆவது முறையாக பிரதமர்  - மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

 

தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு X தள நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருகிற 9 ஆம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.