×

வெள்ளத்துக்கு மத்தியில் காரில் பயணம்! நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகள்

 

தெலங்கானாவில் மகளை விமான நிலையத்திற்கு காரில் அழைத்துச் சென்ற தந்தை, மகள் வெள்ளத்தில் காருடன் அடித்து சென்றனர்.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சிங்கரேணி மண்டலம் கேட்காரேபள்ளி கங்காரம் தாண்டாவை சேர்ந்த  மோதிலால் மற்றும் அவரது மகள் அஷ்வினி ஐதராபாத்திற்கு  விமான நிலையத்திற்கு  காரில் சென்று கொண்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கார் புருஷோத்தமய்யா குடேம் அகேறு ஓடையில் உள்ள உயர்மட்ட பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே கார் வெள்ளத்தில் கார்  அடித்துச் செல்லப்பட்டது. இதில் தந்தையும் மகளும்  அடித்துச் செல்லப்பட்டனர்.

அஷ்வினி கழுத்து வரை தண்ணீர் வந்ததாக தனது உறவினர்களிடம் போனில் பேசிய  சில நிமிடத்தில்  போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் பல இடங்களில் தேடிய நிலையில்   அஷ்வினியின் உடல் பாலத்திலிருந்து சிறிது தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சிரோல் எஸ்.ஐ. நாகேஷ் மற்றும்  போலீசார் டோலி கட்டி சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். மோதிலால் சடலம் கிடைக்காததால்  அவரை தேடும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்த அஸ்வினி இளம் வேளாண் விஞ்ஞானி ஆவார்.