×

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி

 

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதியுதவி வழங்கப்படும் எனவும் இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.