×


டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு!

 

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.  இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார்.  

அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்  வரவேற்றார் .அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது.

மொரிசியஸ், வங்கதேசம் ,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சு வார்த்தையை பிரதமர் மோடி இன்று நடத்த உள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து , ஜப்பான்,  ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் .  இதைத் தொடர்ந்து பிரான்ஸ அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் விருந்து மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.இது தவிர கனடா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ,தென்கொரியா, பிரேசில் ,நைஜீரியா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு,  மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.