×

மாதவிடாய் விடுப்பு வழக்கு - பெண்களுக்கு பாதகமாக அமையலாம்!!

 


மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,   மாதவிடாய் நேரத்தில் விடுப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பங்களிப்பு குறைய வாய்ப்புள்ளது; அதிக விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். 

பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சி, அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது; மாதவிடாய் கால விடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  

எனவே சம்பந்தப்பட்ட மனுதாரர், பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கை வைக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்துள்ளனர்.