×

2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து- உயர்நீதிமன்றம் அதிரடி

 

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகத்தால் 2011 முதல் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களையும் ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியலை மேற்கு வங்காள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் தயாரிக்கும் எனவும், 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியால் வழங்கப்பட்ட ஓபிசி பரிந்துரைகள் சட்டவிரோதம் எனக்கூறி, அதனை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இருப்பினும் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஓபிசி சான்றிதழ் பெற்று ஓபிசி இடஒதுக்கீடு மூலம் வேலை பெற்றிருந்தால் அல்லது அதற்கான நடைமுறை சென்று கொண்டிருந்தால் அது ஒடதுக்கீட்டில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது, அவர்களுடைய வேலையை பாதிக்காது என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின், இந்த உத்தரவை ஏற்க முடியாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

2012ம் ஆண்டு பல சாதிகளை ஓபிசி பிரிவில் கொண்டுவந்து திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓபிசி இடஒதுக்கீடு தொடரும். வீடு வீடாக ஆய்வு நடத்தி மசோதாவை நாங்கள் தயாரித்துள்ளோம், அது அமைச்சரவை மற்றும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மோடி தபசிலிகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புகிறார். நான் அதை அனுமதிக்க மாட்டேன். அவர் ஆதிவாசிகளின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறார்” என்றார்.