×

ஹவுரா - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் பலி..

 

ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.  

ஜார்க்கண்ட் மாநிலம்  செராய்கேலா மாவட்டத்தில் இன்று (ஜூலை 30) அதிகாலை ஹவுராவிலிருந்து  மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  இதில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டு புரட்டிப் போடப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: இன்று அதிகாலை 3.45 மணியளவில் மும்பை - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12810) சக்ரதர்பூர் அருகே தடம்புரண்டதாக தெரிவித்தார்.  2 பேர் உயிரிழந்த நிலையில்  20 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும்,  சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேல் சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.  

தொடர்ந்து  ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 80% பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளோரை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் ரயில் விபத்து காரணமாக ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்திருக்கிறது. அவை., 

டாடாநகர்: 06572290324
சக்ரதர்பூர்: 06587 238072
ரூர்கேலா: 06612501072, 06612500244
ஹவுரா: 9433357920, 03326382217
ராஞ்சி: 0651-27-87115
HWH ஹெல்ப் டெஸ்க்: 033-26382217, 9433357920
SHM ஹெல்ப் டெஸ்க்: 6295531471, 7595074427
KGP ஹெல்ப் டெஸ்க்: 03222-293764
CSMT ஹெல்ப்லைன்: 55993
P&T: 022-22694040
மும்பை: 022-22694040
நாக்பூர்: 7757912790

மேலும், இந்த விபத்து காரணமாக இந்த மார்க்கத்தில் இயக்கப்படும்  ஹவுரா - இஸ்பாட் எக்ஸ்பிரஸ் ரயில் (22861), காரக்பூர் - தன்பாத் எக்ஸ்பிரஸ், ஹவுரா - பார்பில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சவுத் பிஹார் எக்ஸ்பிரஸ் (13288) மாற்றுப் பாதையில் செல்லும் எனவும்,  அசன்சோல் டாடா மெமும் சிறப்பு ரயில் (08173) ஆத்ரா வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.