×

“மனைவி டார்ச்சர் தாங்க முடியல”- வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கணவர் தற்கொலை

 

அனந்தபூர் மாவட்டத்தில் மனைவி டார்ச்சர் தாங்க முடியவில்லை எனக்கூறி கணவர் பூச்சி மருந்து குடித்து செல்பி வீடியோ வாட்ஸ் ஸ்டேடஸ் வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பெலுகுப்பா மண்டலம் தித்தேகுண்டா கிராமத்தைச் சேர்ந்த அனில்குமாருக்கு ஒரு ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில மாதங்களுக்கு பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரு வீட்டாரும் சமாதானம் செய்து வைத்தனர். இருப்பினும் சில மாதம்  மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் அனில்குமார் தற்கொலை செய்து கொண்ட செல்ஃபி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த செல்பி வீடியோவில் மனைவியின் தொல்லையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கூறி பூச்சி மருந்து குடித்தார். 

முன்னதாக  தனக்குக் பெண் கொடுத்த அத்தை மற்றும் மாமா மிகவும் நல்லவர்கள் என்றும், அவர்கள்  இருக்கும்போது  மனைவி நன்றாக இருப்பதாகவும், அவர்கள் இல்லாவிட்டால்  தன்னைத் துன்புறுத்துவதாகவும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் அம்மா, அப்பா என்னை  மன்னிக்கவும், அம்மா உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி அனில்குமார் பூச்சி மருந்தை குடித்தார். இந்த வீடியோவை அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.