×

ஐதராபாத்தில் திறந்திருந்த கால்வாயில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திறந்திருந்த கால்வாயில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அவ்வாறு  ஜெடிமெட்லாவில் உள்ள பிரகதிநகர் என்.ஆர்.ஐ. காலனி அருகே தனது தாத்தாவுடன் நடந்து சென்ற 4 வயது மிதுன் ரெட்டி என்ற திறந்திருந்த  கால்வாயில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டான். சிறுவனை மீட்க மாநில பேரிடர் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்ட நிலையில், அது பலன் அளிக்காமல் சிறுவன் உடலை நிஜாம்பேட்டை ராஜீவ் கிரிககல்பாவில் கண்டெடுத்தனர்.  ஆனால் சடலத்தை எடுக்க முயன்றபோது ​​வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் பைபர் படகில் சென்று மிதுன்  உடலை மீட்டனர். 

இதேபோல் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் சிட்யாலா மண்டல் மையமான கைலாப்பூரில் விவசாய நிலத்தில் மிளகாய் செடிக்கான நாற்று நடும் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது  மின்னல் தாக்கியதில் செலிவேரு சரிதா (30), நேரிபதி மம்தா (32) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுத்த நான்கு நாட்களுக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால் 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தேவை இல்லாமல் நீர்நிலை ஓடைகளில் செல்ல வேண்டாம்.வெள்ள நீர் செல்லக்கூடிய இடங்களில் வேடிக்கை பார்ப்பதற்கான இடமாக செல்ல கூடாது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் அருகில் செல்லாமல் இருப்பதும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.