×

சாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தலைன்னா..! பிரதமர் மோடி கண்முன் அது நடக்கும் - ராகுல் காந்தி எச்சரிக்கை..  

 

சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும்,  தற்போதைய அரசு நடத்து தவறினால் அடுத்து வரும் பிரதமர் கணக்கெடுப்பு மேற்கொள்வதை பிரதமர் மோடி பார்ப்பார் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  தற்போது நாடு முழுவது சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் மக்களின் எண்ணிகை 59லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கூடிய விரைவில் 90% மக்கள் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். 

 சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியை வழங்கும் கொள்கை கட்டமைப்பை உருவாக்குது  என்றும்,  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்துவிடலாம் என பிரதமர் மோடி கனவு காண்பதாக குறிப்பிட்டுள்ளார்.  எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது என்றும், மக்கள் தீர்ப்பளிக்க தயாராகி விட்டார்கள் என்றும்,  விரைவில் 90 சதவிகிதம் மக்கள் சாதி மாறி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்துவார்கள் என்றும்  குறிப்பிட்டுள்ளார். மக்களின் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால்,  அடுத்துவரும்  பிரதமர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை பிரதமர் மோடி கண்முன் பார்ப்பார் என்றும் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.